INO Ph.D பயிற்சி பள்ளி

INO வெற்றி பெற, ஆற்றல் மிக்க இயற்பியல் வல்லுநர்கள் மற்றும் பொறியாளர்கள் பெரும் எண்ணிக்கையில் தேவை. இந்த இலக்கை அடைவதற்கு, ஒரு Ph.D பயிற்சி பள்ளி கடந்த 2002 ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டது. விண்ணப்ப முறை மற்றும் பள்ளி சேர்க்கையைப் பற்றி அறிய எங்களுக்கு எழுதுங்கள். இந்த பயிற்சி பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் ஹோமி பாபா தேசிய நிறுவனத்திலிருந்து (மும்பை) Ph.D பட்டம் பெறுவார். தத்துவார்த்த மற்றும் சோதனைமுறை இயற்பியல் ஆராய்ச்சியில் மாணவர்கள் சிறப்பாக வரும்படியாக இந்த பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

தகுதி:
இயற்பியலில் M.Sc மற்றும் B.E./B.Tech (Electronics, E &CE, Instrumentation and Electrical Engineering) கொண்ட மாணவர்கள் (குறைந்த பட்சம் 55% மதிப்பெண்கள்) இந்த பயிற்சி பள்ளியில் சேரலாம்.


அனைத்து மாணவர்களுக்கும் இலவச விடுதி வழங்கப்படும். மாத உதவித்தொகையாக ருபாய் 18,000 யும் மேலும் ஆண்டிற்கு ரூபாய் 20,000 இதர செலவுக்காகவும் வழங்கப்படும்.

குறுகிய கால ஆராய்ச்சி திட்டத்தில் (short-term projects) சேர எங்களை நீங்கள் நேரடியாக தொடர்பு கொள்ளலாம். உங்களுக்கான பரிந்துரைகளை கொடுக்க நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம்.

மேலும் விவரத்திற்கு:
Prof.Naba Mondal, (nkm@tifr.res.in)
Spokesperson, India-based Neutrino Observatory,
Dept. High Energy Physics,
Tata Institute of Fundamental Research,
Homi Bhabha Road, Mumbai 400005, INDIA